பக்கம் எண் :

14 சாமி சிதம்பரனார்

நட

நட்புக்குப் பிறகுதான் அவர்கள் ஊரார் அறிய மணம் புரிந்துகொண்டு
இல்லறம் நடத்துவார்கள். அப்பொழுது கற்பு மணம் என்று பெயர்.

இவர்கள் களவு மணத் தம்பதிகளாய் வாழும்போது, காதலன் இரவு
நேரத்திலே வருவான்; ஒரு குறிப்பிட்ட இடத்திலே தலைவியைக் கண்டு
அளவளாவிச் செல்லுவான். இப்படிப் பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
இந்தக் களவு மணத்திலிருந்து மாறிக் கற்பு மணம் புரிந்து கொள்ளவேண்டும்
என்பது தலைவியின் ஆவல்; அவளுடைய தோழியின் எண்ணமும் இதுதான்.
இந்த எண்ணத்தை ஒருநாள் தலைவனிடம் தெரிவிக்கின்றாள் தோழி.
இந்த நிகழ்ச்சியைக் கூறும் செய்யுள் ஒன்று. அச்செய்யுள் மிகவும் சிறந்த
கருத்துடன் அமைந்திருக்கின்றது.

‘‘நன்மணம் கமழும் மலைச்சாரலிலே தினைப்புனங்காப்பவர்கள்
திரிந்துகொண்டிருப்பார்கள்; அந்த மலைப் பாதையிலே நீங்கள் இனிமேல்
வரவேண்டாம்; ஏனென்றால் அவர்களுக்கு இனிய மொழிகள் பேசத்
தெரியாது; அவர்கள் கொல்லுதற்கு உதவும் வில்லைக் கையிலே
பிடித்திருப்பார்கள்; நெருங்குகின்றவர்களைக் குத்திக் கொல்லும் வேலும்
வைத்திருப்பார்கள்; விரைந்து பாயக்கூடிய கணைகளையும்
வைத்திருப்பார்கள்;அவர்கள் கல்லிலே (மலையிலே) வாழ்கின்றவர்கள்;
ஆதலால் அவர்கள் நெஞ்சமும் கல்லாகத்தான் இருக்கும்; அவர்கள்
எங்களைச் சேர்ந்தவர்கள்தாம்; ஆயினும்கொடியவர்கள்.
 

விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்;
வரையிடை வாரன்மின்! ஐய!-உரைகடியர்;
வில்லினர்; வேலர்; விரைந்துசெல் அம்பினர்;
கல்லிடைவாழ்நர்எமர்’’.                               (பா.5)