அரசாங்க வேலையில் ஈடுபட்டிருப்பவனுக்கும் போதுமான ஓய்வு
கிடைக்காது.
ஆதலால்
அவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது.
மணமகனாக இருப்பவனும், ஆசாரத்திலே கருத்தைச் செலுத்த முடியாது.
மற்றவர்கள்
விருப்பப்படிதான் ஆடவேண்டும்.
இவ்வாறு ஒன்பது பேரை ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள்;
ஆசாரத்திலிருந்து
விடுதலை பெற்றவர்கள்; என்று குறித்திருப்பது மிகவும்
பொருத்தமானதாகும்.
இந்த நூலில் கூறப்படும் ஒழுக்கங்களில் ஒரு சிலவற்றைத் தவிர
மற்றைவையெல்லாம்
உண்மையானவை; பின்பற்றக்கூடிறயவை. இதில் ஐயம்
இல்லை. ஆனால் இக்காலத்தில்
எல்லா மக்களும், ஆசாரக் கோவையில்
சொல்லுகிறபடியே நடக்க முடியாது. ஓயாது
உழைப்பவர்களுக்கு
ஆசாரத்தைப்
பற்றி நினைக்க நேரம் ஏது? நகரில் வாழ்வோர் பலர்க்கு
ஆசாரக் கோவையின்
உரைகள் ஒத்துவராமல் இருக்கலாம். ஆயினும்,
இந்நூலில்
உள்ளவைகளிலே
பல, விஞ்ஞானத்திற்கு ஒத்துவருவன.
இவ்வுண்மையை ஆசாரக்
கோவையை
ஒரு முறை படித்தாலே உணர்ந்து
கொள்ளலாம்.
|