17. பழமொழி
நூல் வரலாறு
பழமொழி, அல்லது பழமொழி நானூறு என்பது இந்நூலின் பெயர்.
நானூறு
பாட்டுக்களைக்
கொண்டது. ஒவ்வொரு பாட்டும் ஒரு பழமொழியை வைத்துக்
கொண்டு
பாடப்பட்டது. எல்லாம் வெண்பாக்களே.
ஒவ்வொரு பாட்டின் முடிவும்
ஒரு பழமொழியைக்
கொண்டு முடிகிறது.
இப்பழமொழிகளிலே பல இக்காலத்தில் விளங்கவில்லை; அவைகள்
வழக்கிழந்து
விட்டன. ஆயினும்
பல பழமொழிகள் இன்றும் வழக்கத்தில்
உள்ளவை.
இந்நூலாசிரியர் பெயர் முன்றுறையர் என்பது. இவர் வரலாற்றைப்
பற்றி
ஒன்றும்
தெரியவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே மூன்று நூல்கள் சிறந்தனவென்று
கருதப்படுகின்றன. அவை
முப்பால், நாலடி, பழமொழி என்பன. இம்மூன்றும்
மற்ற
நூல்களைவிட உருவில் பெரியவை; பாட்டுக்களின்
தொகை அதிகம்.
அறம், பொருள், இன்பம், வீட்டு நெறி இவைகளைப் பற்றி விரிவாகக்
கூறுகின்றன.
இம்மூன்று நூல்களில்
பழமொழியை மூன்றாவதாகக் கூறலாம்.
பழமொழியைப் பற்றி
வழங்கும் கதை ஒன்று உண்டு. அது
நாலடியாரோடு
ஒட்டியகதை. சமண முனிவர்களின் பாடல்களிலே சிறந்த
நானூறு
வெண்பாக்களை நாலடியாராகத் தொகுத்தனர். ஏனைய நானூறு
வெண்பாக்களைப்
|