பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்133

New Page 1

நெருங்கிய மடல்களையும், பூக்களையும் உடைய தாழைகள் நிறைந்த
கடற்கரையின் தலைவனே! முல்லைக்கொடி படர்வதற்காகத் தான் ஏறிவந்த
தேரினையும், குளிர்காலத்திலே மயிலுக்குப் போர்வையையும், முன்பு
கொடையாகக் கொடுத்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிந்திருக்கின்றோம்.
இதைப்பற்றிச் சொல்லப்போனால் அறிவிலே மடமையும் சான்றோர்க்கு
அணியாகும்’’.

இச்செய்யுள் பாரியின் பெருமையையும், பேகனுடைய பெருமையையும்
எடுத்துக்காட்டின. அவர்கள் செய்கை அறியாமை நிறைந்தது; ஆயினும் அது
அவர்களுக்குப் பெருமை அளித்தது. அச்செயல் அவர்களுடைய சிறந்த
பண்பின் அடையாளமாகத் திகழ்கின்றது. இவ்வுண்மையை உணர்த்தியது
இச்செய்யுள்.

ஒரு செய்யுளிலே, பாரி வள்ளல் மனைவியின் கொடைத் தன்மையைப்
பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ‘‘மாரி வறண்டுபோன காலத்தில், பாண் மகன்
ஒருவன் பாரியின் மனைவியிடம் வந்து இரந்தான். அவனுக்குச்
சோறுபோடுவதைப் போலவே, உலைப் பானையுள் பொன்னை நிறைத்து,
அதைச் சோறாகப் போட்டாள்’’ இவ்வரலாறு ஒரு வெண்பாவிலே
காணப்படுகின்றது. இதுபோல் இன்னும் சில வரலாறுகளும் இந்நூலிலே
காணப்படுகின்றன.

பழமொழிகள்

சிறந்த பழமொழிகள் பலவற்றை இந்நூலிலே காணலாம்.
அப்பழமொழிகள் இன்னும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
அவைகளிற் சிலவற்றை மட்டும் பார்த்தால் போதும்; இந்நூலின் பெருமை
விளங்கும்.

இருதலைக்கொள்ளி என்பது ஒரு பழமொழி இரண்டு பக்கமும்
நெருப்புள்ள கட்டை இருதலைக் கொள்ளி. அது