|
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு பழமொழி. இதனை
உயர்ந்தோர்க்கு உதாரணமாக
எடுத்துக்காட்டுகின்றார் இந்நூலாசிரியர்.
உயர்ந்தவர்கள்
வறுமையால்
எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தமது
நிலையிலே
தவறமாட்டார்கள்.
இழிந்த
செயல்களைச் செய்யமாட்டார்கள். புலி
எவ்வளவு
பசியால் வாடினாலும் தனது நிலையிலே
தவறாது. வழக்கமாகத்
தான்
உண்ணும்
புலால் கிடைத்தால் தான் உண்ணும்; புல்லைத்
தின்னாது.
நாய்க்கு முழுத்தேங்காய்
கிடைத்ததுபோல் என்றொரு பழமொழி
உண்டு.
முழுத்தேங்காயை நாயினிடம்
போட்டால் அதனை அது என்ன
செய்யும்? தானும்
அதைத் தின்னாது; பிறரையும்
அதை எடுக்கவிடாது;
சும்மா காத்துக் கொண்டுதான்
கிடக்கும். ஒருவன் செல்வத்தை நிரம்பச்
சேர்த்து வைத்துக்
|