|
கொண்டிருக்கின்றான். அவன் அச்செல்வத்தைப் பிறர்க்கும் உதவுவதில்லை;
தானும்
அனுபவிப்பதில்லை.
ஆதலால் அச்செல்வம் நாய்க்குக்கிடைத்த
முழுத்தேங்காயைப்
போன்றதுதான் என்று கூறுகிறது ஒரு செய்யுள்.
நாய்பெற்ற தெங்கம் பழம் என்று
பண்டைக் காலத்தில் வழங்கியது
இப்பழமொழி.
நுணலும் தன் வாயால் கெடும் என்பது ஒரு பழமொழி. தவளை தன்
வாயினாலேயே
கெட்டுப்போகும்
என்பதே இதன் பொருள். மழை பெய்து
தண்ணீர் நிரம்பிவிட்டால்
தவளைக்கு ஆனந்தம். அது தானாகவே
கத்திக்
கொண்டிருக்கும். தவளையை உணவுக்காகத்
தேடித் திரியும் பாம்பு, அது
இருக்கும் இடத்தை எளிதிலே
தெரிந்துகொள்ளும்; சென்று
அதைப் பிடித்து
விழுங்கிவிடும். இதனால்தான் நுணலும் தன்
வாயால் கெடும்
என்ற
பழமொழி உண்டாயிற்று.
‘‘பிறர் மேல்
பொல்லாங்கு சொல்லிக்கொண்டு ஒளிந்து திரியும்
அறிவிலிகள்
சிலர் உண்டு. அவர்களை யாரும் தேடிப்பிடிக்க வேண்டுவதே
இல்லை. அவர்களே
அகப்பட்டுக் கொள்ளுவார்கள். அவர்களுடைய
சொற்களே அவர்களைக்
காட்டிக்கொடுத்துவிடும்.
நுணலும் தன் வாயால்
கெடும் என்ற பழமொழிக்கு
ஏற்றவர்கள் இவர்கள்தாம்’’ என்று கூறுகிறது
அச்செய்யுள்.
இவ்வாறு பல சிறந்த பழமொழிகள் அமைந்த பாடல்களை இந்நூலிலே
படித்தறியலாம்.
நம்பிக்கைகள்
கனவிலே, காணப்படுவது பொய்யன்று. அது பின்னால் நடைபெறுவதை
முன்னே அறிவிக்கும் அறிகுறியேயாகும்.
என்பது ஒரு பழமொழிப் பாட்டின்
கருத்து. கனவில்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றே
இந்நூல்கூறுகிறது.
|