|
‘‘தொன்று தொட்டுக் கீழான பரம்பரையிலே பிறந்து வந்த
நீசர்களுக்குள்
எவ்வளவு
தேடினாலும் நற்குணம் உடையவர்
காணப்படமாட்டார்’’
பிறப்பில் சிறியார்; பிறப்பினால் சாலவும் மிக்கவர்; என்ற
தொடர்கள்
பழமொழி
வெண்பாவிலே காணப்படுகின்றன.
இவைகளைக்கொண்டு
இந்நூலாசிரியர்
காலத்திலேயே
பிறப்பிலே உயர்வு
தாழ்வு உண்டு என்ற கொள்கை
தமிழகத்திலே நிலைத்து
வேரூன்றி
விட்டதென்று தெரிந்துகொள்ளலாம்.
ஊழ்வினையிலும் இந்நூலாசிரியர்க்கு நம்பிக்கையுண்டு. ஊழ்வினையை
வலியுறுத்தும்
வெண்பாக்கள் பல
உண்டு. ஆனால் முயற்சியினால்
ஊழ்வினையின் கொடுமையைத்
தவிர்க்க முடியும் என்ற கொள்கையையும்
பழமொழி நூல் ஒப்புக் கொள்ளுகிறது.
திருக்குறளும் பழமொழியும்
பழமொழியின் பாடல்களிலே பலவற்றில் திருக்குறளின் கருத்துக்கள்
காணப்படுகின்றன.
பழமொழிப் பாடல்களின் அமைப்பு சங்கநூல்
பாடல்களைப்போல்காணப்படுகின்றது.
இதைக்கொண்டு,
பழமொழி
திருக்குறளுக்கு முன் பிறந்த நூலாக இருக்குமோ என்று
ஐயுறவும் இடம் உண்டு.
இது நன்றாக ஆராயத்தக்கது.
|