|
‘‘யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத ஆறு
|
கற்றவனுக்கு எந்நாடும் தன்நாடே; எவ்வூரும் தன்னூரே; இவ்வாறிருக்க
ஒருவன்
இறக்கும்
வரையிலும் கல்வி கற்காமல் காலம் கடத்துவது ஏன்?
(கு.397)
இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே
கருத்தைக்
கொண்டிருக்கின்றன. இக்குறளின்
விரிவுரைபோல்
அமைந்திருக்கின்றது
இப்பழமொழிப்
பாட்டு. இப்பழமொழிப் பாட்டின்
கருத்துபோல் காணப்படுகின்றது
குறள்.
|
|
‘‘கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழ்ஆல்-ஒறுத்து ஆற்றின்
வான் ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன்றிட
வரும் சால்பு
|
வானை முட்டிய உயர்ந்த மலையையுடைய மன்னவனே! சினந்து நின்று
தமக்குக் கொடுமை செய்தவர்களின்
குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு
நேர்மையான நெறியிலே நடப்பதுதான் பெருமையாகும்; புகழாகும்.
அப்படியில்லாமல்
தாமும் சினங்கொண்டு அவர்களைத் தண்டிப்பதனால்
பயன் இல்லை. பொறுமையினால்தான்
நல்ல பண்புகள் வளரும்’’. இது
பழமொழிச் செய்யுள்.
|
|
‘‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
|
தமக்குத் தீமை செய்தவரை எதிர்த்துத் தண்டித்தவர்க்கு ஒரே நாள்
இன்பந்தான்
உண்டு.
தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம்
அழியும்
வரையினும்
புகழ்உண்டு’’.
(156)
|