(கு. 270)
இவ்வுலகில் தவம் புரிவோர் சிலர்; தவம் புரியாதவர்கள் பலர்;
ஆதலால்தான்
செல்வம்
உள்ளவர்கள் சிலராகவும், வறுமையுள்ளவர்கள் பலராகவும்
இருக்கின்றனர்’’
முன் பிறப்பில் செய்த தவமே இப்பிறப்பில் செல்வம் எய்திச் சிறந்து
வாழ்வதற்குக்
காரணம். முன் பிறப்பில்தவம் செய்யாமையே இப்பிறப்பில்
வறுமையுற்று வருந்தி
வாழ்வதற்குக் காரணம்; என்று கூறுகிறது இக்குறள்.
இக்குறளும், மேலே காட்டிய
பழமொழிப் பாட்டும் ஒத்த கருத்துள்ளவை.
இவ்வாறு திருக்குறள் கருத்துடன் ஒத்துக் காணப்படும் பழமொழிப்
பாடல்கள்
பல
உண்டு.
பழக்க வழக்கங்கள்
இந்த நூலிலே ஒரு வெண்பாவில்
நாய்கொண்டால்
பார்ப்பாரும்
தின்பார்
உடும்பு என்ற பழமொழி காணப்படுகின்றது.
கீழோரிடமிருந்து
நல்ல சொற்கள் பிறந்தால்
அதை இகழாமல் ஒப்புக்கொள்ள
வேண்டும்
என்று கூறுகிறது அச்செய்யுள். நாய் கௌவிய
உடும்பை, நாய் கவ்வியது
என்று
|