பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்143

New Page 1
இகழாமல் பார்ப்பாரும் தின்பார்கள். ஆதலால் கீழோர் வாயிலிருந்து
பிறந்தது என்பதற்காக நல்ல சொல்லை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்
இதனை
 
  ‘‘எள்ளல் கயவர்வாய் இன்உரையைத்-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பார் உடும்பு’’.
 

என்பதனால் காணலாம்.

‘‘நாய்கொண்ட உடும்பினைப் பார்ப்பாரும் தின்பர் அதுபோல’’ என்றது,
வேட்டைநாய் பற்பதியக் கௌவிப் பிடித்ததாயினும் உடும்பின் தசை
உண்பார்க்கு நன்மை பயத்தலால், அதனை நாய் வாய்ப்பட்டதென்று
இகழாது. பார்ப்பாரும் விரும்பிக் கொள்வர்; அதுபோலக் கயவர் ஒரு செய்தி
சொல்லுமிடத்து நல்லுரை தோன்றின் அதனைக் கயவர் வாய்ப்பட்டது
என்று இகழாது உயர்ந்தோரும் விரும்பிக் கொள்வர் என்றவாறு. பார்ப்பாரும்
என்னும் உயர்வு சிறப்பும்மையால் எல்லோரும் என்பது குறிப்பு’’. இவ்வாறு
வடமொழியிலும் தமிழிலும் வல்லுநரான-மதுரைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின்
தலைமையாசிரியராயிருந்த திரு. நாராயணய்யங்கார் அவர்கள் கூறுகின்றார்.
பழமொழியின் பழையவுரைக்கு அவர் எழுதியிருக்கும் விளக்க உரையிலே
இவ்வாறு எழுதியுள்ளார்.

இதனால் தமிழர்கள் உடும்புக் கறியைச் சிறந்த கறியாகக் கருதி வந்தனர்
என்று தெரிகின்றது.

எருமையை அடித்து அதைக் கறி சமைத்துச் சாப்பிடும் வழக்கமும்
தமிழ் நாட்டில் இருந்தது. இதை இந்நூலின் வெண்பாவினால் அறியலாம்.

பழங்காலத்திலே குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள்
விதிக்கப்பட்டன. கடன் பெற்றவன்,