பக்கம் எண் :

144சாமி சிதம்பரனார்

New Page 1

அக்கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தான் கடன் வாங்கவில்லை
என்று மறுத்தால்-அவனை நல்ல பாம்பை அடைத்த குடத்திலே கைவிடச்
சொல்லுவார்கள்; அவன்உண்மையிலே கடன் வாங்காவிட்டால், குடத்தில்
உள்ள பாம்பு அவன் கையைக்கடிக்காது; அவன் கடன் வாங்கியிருந்து,
வாங்கவில்லை என்று பொய் புகல்வானாயின் அப்பாம்பு அவன் கையைக்
கடித்துவிடும். இதுவே அக்கால மக்கள் நம்பிக்கை. இதனைக் ‘‘கடம்
பெற்றான் பெற்றான் குடம்’’ என்ற பழமொழியில் முடியும் பாட்டால்
அறியலாம்.

அக்காலத்திலே மன்னர்கள் தனி அதிகாரம் செலுத்தி வந்தனர்.
அவர்கள் அநீதி செய்யக் கூடாது. மன்னர்களின் மனத்திலே சினம்
மூளும்படி நடந்து கொள்ளுவது, தூங்குகின்ற புலியைத்
தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் ஆகிவிடுமாம்.
 

  ‘‘வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துள் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;
என்செய்து அகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்
 

கடுங்கோபத்தையுடைய அரசன், நாம் வெறுக்கத்தக்க செயல்களைச்
செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அவன் நெஞ்சிலே
கோபம் கொள்ளும்படியான செயல்களைச் சிறிதாவது செய்யக்கூடாது. என்ன
தந்திரங்களைச் செய்து, தம்மிடத்திலே அகப்பட்டபோதும். தூங்குகின்ற
புலியைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்களா? எழுப்பமாட்டார்கள்.
எழுப்பினால் அதற்குப் கோபம் வரும்; தீமை செய்யும்’’.

இவ்வாறு அரசர்களைப்பற்றிப் பத்தொன்பது பாடல்கள்
காணப்படுகின்றன. அவை அனைத்தும் அரசர்களுடைய