பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்145

New Page 1

சர்வாதிகாரத்தை-தனி அதிகாரத்தை ஆதரிக்கும் செய்யுட்களாகவே
இருக்கின்றன. இதனால் பழமொழி நூல் தோன்றிய காலத்தில் மன்னர்களின்
ஆட்சியே நிலைத்திருந்தது; அவர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்களாகவே
விளங்கினார்கள்; என்று எண்ண இடம் இருக்கின்றது.

பழைய பழக்க வழக்கங்கள் பலவற்றைப் பற்றியும் பழமொழியிலே
படித்தறியலாம். இந்நூலிலே காணப்படும் பழமொழிகளிலே பல,
நகைச்சுவையுடையனவாகவும் காணப்படுகின்றன. படித்தறிய வேண்டிய நீதி
நூல்களிலே பழமொழி நானூறும் ஒரு சிறந்த நூல். பழந்தமிழர்
பண்பாட்டைக் காணுவதற்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.