அந்தச் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில், பாண்டியன் பாதுகாப்பில்
பன்னிரண்டு
ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
இதற்குள் அவர்கள் தமிழை
நன்றாகக் கற்றிருந்தனர்.
கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர்.
இறுதியில் அவர்கள்,
தாங்கள் தங்கியிருந்த குடிசைகளில், தங்கள்
ஆசனங்களுக்கு
அடியில் வெண்பாக்களை எழுதி வைத்தனர். இரவோடு
இரவாகப் பாண்டியனிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுப் போய்
விட்டனர்.
அவர்கள் போய்விட்டதை அறிந்தான் பாண்டியன்; அவர்கள் இருந்த
குடிசைகளைச்
சோதனையிட்டான்.
அவர்கள் எழுதி வைத்த ஏடுகள்
கிடைத்தன.
எல்லாவற்றையும் படித்துப் பார்க்கும்படி புலவர்களுக்குக்
கட்டளையிட்டான்.
அப்பாடல்கள்
ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல்
தனித்தனிப் பாடல்களாகக்
காணப்பட்டன. இதை அறிந்த பாண்டியன்
அவைகளை வைகையாற்றிலே
போட்டுவிடும்படி
கூறினான்.
அரசன் கட்டளைப்படி அவைகள் வைகை வெள்ளத்தில் விடப்பட்டன.
அவைகளில்
நானூறு வெண்பாக்கள்
வெள்ளத்தோடு போகாமல் எதிர்த்து
வந்தன.
அந்த
நானூறு
ஏடுகளையும் பொறுக்கினர். அவைகளில்
இருந்த
நானூறு
பாடல்களையும்
சேர்த்தனர்,
நாலடியார் என்ற நூலாக்கினர்.
இதுதான்
நாலடியாரைப்
பற்றிய கதை.
அந்த எண்ணாயிரம்
ஏடுகளில், வெள்ளத்திலே போய்விடாமல்
அங்கங்கே
பல ஏடுகள் தங்கிக் கிடந்தன. அவைகளையும்
ஒன்று
சேர்த்தனர்; நானூறு ஏடுகள்
தேறின. அந்த நானூறு ஏடுகளில் இருந்த
நானூறு வெண்பாக்களையும் சேர்த்துப் பழமொழி
என்ற நூலாக்கினர்.
இக்கதை
|