நல்வினைகள் செய்வதைப் பற்றிப் பிறகு எண்ணிப்பார்க்கலாம்.
இப்பொழுது நாம்
இளமைப் பருவம்
உள்ளவராகத்தானே இருக்கின்றோம்.
இப்பொழுதென்ன அவசரம் என்று
நினைக்காதீர்கள்! கையில்
பொருள்
உள்ள போதே ஒளிக்காமல் நல்லறங்களைச்
செய்யுங்கள். முற்றியிருந்த கனி
உதிராமல்
அப்படியே தங்கியிருக்கும்; கொடுங்காற்றால்,
பழுக்காத நல்லகாய்
உதிர்ந்து போவதும் உண்டு’’
(பாட்டு 19) இச்செய்யுள் மிகவும்அருமையான
செய்யுள். வயதேறியவர்கள் வாழ்வதும், இளையவர்கள்
இறப்பதும் இயற்கை
என்பதை எடுத்துக் காட்டிற்று. இதன் மூலம் இளமைப் பருவத்தை நம்ப
வேண்டாம்
என்றும் உரைத்தது.
மற்றொரு பாடல், மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியை
உதாரணமாகக்
காட்டி ஒரு நீதியை
உணர்த்துகின்றது.
நாய் கடித்தால் அதைத் திருப்பிக் கடிப்பவர் யாரும் இல்லை. கடித்த
நாயைத்
திருப்பிக்
கடிக்க வேண்டும் என்று எந்தப் பைத்தியக்காரனும்
கருதமாட்டான்.
|