பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்151

New Page 1

கெட்ட குணம் உள்ள சில அற்பர்கள், மனிதத் தன்மையின்றி, சில
நல்ல மனிதர்களின் மேல் வசைமாரி பொழியலாம் நல்ல மனிதர்கள்
அவர்களுக்கு எதிர்மாற்றம் கொடுக்கமாட்டார்கள்; ஒதுங்கித்தான்
போவார்கள். இக்கருத்தை விளக்குகிறது இச்செய்யுள்.
 

  ‘‘கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம் வாயால்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு
 

கோபங்கொண்டு நாய் தன் வாயால் கடிப்பதைக் கண்டும், தாம் அந்த
நாயைத் தம் வாயினால் கடிப்பவர் யாரும் இல்லை. அதுபோல
மனிதத்தன்மையில்லாமல், கீழ்ப்பட்ட மக்கள் கீழான
வார்த்தைகளைக்கூறினால், உயர்ந்தவர்கள், அவைகளுக்கு மாறாகத் தாமும் கீழான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பாட்டு. 70)

மனிதத் தன்மையற்ற முறையில் வசை மொழிகளை அள்ளி
இறைப்பவர்களை, நாய்கள், என்று சொல்லிற்று இச்செய்யுள்.

மற்றொரு பாட்டு உலக இயற்கையை அப்படியே படம்பிடித்துக்
காட்டுகிறது. மக்களுடைய சுயநலத் தன்மையைத் தெளிவாக விளக்கிக்
காட்டுகின்றது.
 

  ‘‘கால்ஆடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேல்ஆடு மீனில் பலர் ஆவார்-ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்பு உடையேம் என்பார் சிலர்.
 

ஒருவர் செல்வம் உள்ளவராய்த் திரியும்போது. அவருக்கு உறவினர்கள
மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களைக்
காட்டிலும் அதிகமா