|
(பாட்டு.113)
இன்றைய உலகிலே தமக்கென்று ஏதாவது சேர்த்து வைத்துக்
கொண்டிருக்கும்
மக்கள்தாம் வாழ
முடியும். ஒன்றுமில்லாத ஏழைகள் வாழ
முடியாது. செல்வம்
படைத்தவர்களைத்தான் பலர் உறவு முறை
பாராட்டிச்
சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
ஏழைகளை எவரும், தங்கள் உறவினர் என்று
சொல்லிக்
கொள்ள மாட்டார்கள். இந்த
இயற்கை உண்மையை எடுத்துக்
காட்டிற்று இவ்வெண்பா.
நட்பைப்பற்றிச் சொல்லும் மற்றொரு அழகான பாட்டு குறிப்பிடத்தக்கது.
அச்செய்யுளில்
உள்ள
உவமானம் படிப்போர் உள்ளத்திலே அப்படியே
படிந்துவிடும். |