|
இருப்பான்; என்ற உண்மையை இவ்வெண்பா எடுத்துக் காட்டிற்று.
தெரிந்த செய்திகள்; விளங்கக்கூடிய உவமானங்கள்; நகைச்சுவை தரும
பொருள்கள்; இவைகளைக்
காட்டி உண்மைகளை உணர்த்துவதிலே நாலடிப்
பாட்டுக்கள் சிறந்தவை. மேலே எடுத்துக் காட்டியவை
போன்ற பல
பாடல்கள்
நாலடியிலே இருக்கின்றன. அவைகள் படித்துச் சுவைக்கத்
தக்கவை.
ஆகையால்தான்
நாலடியாரைத் திருக்குறளுக்கு அடுத்த சிறந்த
நூலாகப்
போற்றுகின்றனர்; பாராட்டுகின்றனர்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையில்லாதவர்கள்
எந்தக் காரியத்திலும் வெற்றி
பெறமாட்டார்கள். வெற்றியளிக்கும் கருவி தன்னம்பிக்கையேயாகும்.
‘‘நம்மால்
என்ன செய்ய முடியும்? எல்லாம் ஆண்டவன் செயல். அவனன்றி அணுவும்
அசையாது. நாம் நினைப்பது
ஒன்று; நடப்பது ஒன்று’’. இவ்வாறு வேதாந்தம்
பேசும் சில மனிதர்களைப் பார்க்கின்றோம். இப்படிச்
சலிப்படைந்து
பேசுகின்றவர்கள் ‘‘நடப்பது நடக்கட்டும்’’. என்று சும்மா
உட்கார்ந்திருப்பார்களாயின்
அவர்கள் வாழ்க்கையே பாழாகும். அவர்கள்
ஒரு காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள்.
தன்னம்பிக்கையும், அறிவும், முயற்சியுமே ஒரு மனிதனுடைய வெற்றி
நிறைந்த வாழ்வுக்குக் காரணம்,
இவை இன்மையே ஒரு மனிதனுடைய
தோல்விக்கும் வாழ்வின்மைக்கும் காரணம். இக்கருத்தை ஒரு பாடல்
எடுத்துக் காட்டுகின்றது.
|