|
தானும் அனுபவித்துக் கழிக்கமாட்டான்; செல்வம் அற்ற வறியோர்க்கும்
ஒன்றும்
உதவமாட்டான்; பயனின்றிப் பொருளைச் சேர்த்து வைத்துவிட்டு
இறப்பான்; இவன்
அறிவற்ற மடையன்’’.
(பா.273)
இவ்வாறு செல்வத்தைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
செல்வம்அனுபவிப்பதற்கே யன்றிச் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழ்வதற்காக
அன்று
என்பதை ஒரு பாட்டு தெளிவாகக் கூறுகின்றது. செல்வத்தைச்
சேர்த்து
வைத்துக்கொண்டு சும்மா பார்த்துக்
கொண்டிருப்பவனும், செல்வம் இல்லாதவனும்
சமமானவர்கள் என்று
அச்செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது.
|