எந்த நிலத்திலே விதையைக்கொண்டு போய்ப் போட்டாலும் காஞ்சிரம்
விதை
தென்னை
மரமாக முளைத்துவிடாது. தென்னாட்டில் உள்ளவர்களும்,
நற்கருமங்களைச்
செய்கின்றனர்; சுவர்க்கம்
அடைகின்றனர். வடநாட்டிலும்
வீண்பொழுது போக்குவோர்
பலர் உண்டு. அவர்கள் நற்கதி பெறுவதில்லை;
நரகத்தையே அடைகின்றனர். ஆதலால்
ஒருவன் மறுமையிலே பெறும்
நன்மைக்கு
நாடு காரணம் அன்று; தன்
ஒழுக்கமே -
நடத்தையே
காரணமாகும்’’.
(பா.243)
இச்செய்யுள் வடநாடு புண்ணிய பூமி; தென்னாடு பாவபூமி என்னும்
கொள்கை தவறு என்பதை எடுத்துக் காட்டிற்று.
திருக்குறள் கருத்துக்கள்
நாலடியார் பாடல்களிலே பல, திருக்குறளின் கருத்துக்களை விளக்கிக்
கூறுகின்றன.
திருக்குறளை
நன்றாகக் கற்ற ஆசிரியர்களால் பாடப்பட்ட
பாடல்களே நாலடிப் பாடல்கள்
என்று எண்ணலாம்.
|