கூடு தனித்திருக்கும்படி, அதில் உள்ள பறவை பறந்து போவது
போன்றதாகும் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு’’ என்பது
திருக்குறள். இக்குறளின் கருத்து,
|
|
‘‘குடம்பை தனித்தொழியப் புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள்;-வாளாதே
சேக்கைமரன் ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
|
என்ற நாலடிப் பாட்டிலே காணப்படுகின்றது. சேக்கை-கூடு.
|
|
‘‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று எல்லாம்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
|
தவம் செய்பவரே தம்முடைய கடமையைச் செய்கின்றவர்; தவம்
செய்யாதவர்கள்
இவ்வுலக இன்ப ஆசையிலே அகப்பட்டுக்கொண்டு வீண்
செயல்களைச் செய்கின்றவர்
ஆவர்’’ இத்திருக்குறளின் கருத்தை
|
|
‘‘நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்றெண்ணித்
தலைஆயார் தம்கருமம் செய்வார்’’
|
என்ற நாலடி வெண்பாவிலே காணலாம்
|
|
‘‘பகை, பாவம், அச்சம், பழி யென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
|
பிறன் மனையாளிடம் நெறிதவறிச் செல்கின்றவனிடம், பகை, பாவம்,
பயம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் நீங்காமல் நிலைத்திருக்கும்’’ என்பது
திருக்குறள்.
|
|
‘‘அறம், புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம் |