|
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்’’
|
என்பது நாலடியார். இவை இரண்டும் ஒரே கருத்துடையன. இந்நாலடி
வெண்பா மேலே
காட்டிய திருக்குறளுக்குப் பொருள் கூறுவதுபோல்
அமைந்திருக்கிறது.
|
|
‘‘ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஓருங்கு.
|
சிறந்த செல்வத்தை மிகுதியாகச் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு, மற்ற அறம், இன்பம்
இரண்டும் எளிதிலே கிடைக்கும் பொருள்களாம்’’ இது
திருக்குறள்.
|
|
‘‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்;
நடுவணது எய்தாதான் எய்தும் வையத்து
அடுவது போலும் துயர்’’.
|
இது நாலடி வெண்பா. மேலே காட்டிய திருக்குறளும், இந்த நாலடியும்
ஒரே
பொருளைக் கூறுகின்றன.
|
|
உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
|
என்னும் திருக்குறளும்,
|
|
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு
|
என்ற நாலடியும் ஒத்திருக்கின்றன. கண்ணை மூடுவதைச் சாவுக்கும்,
கண்ணைத்
திறப்பதைப்
பிறப்புக்கும் உவமானமாகக் கூறியிருக்கின்றன.
|
|
தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
|
என்றது திருக்குறள்
|