‘‘இடுநீற்றல் பை அவிந்த நாகம்; (பா.66) முன்னே போட்ட திருநீற்றால்
படம்
அடங்கிய பாம்பு’’ என்பது இதை உணர்த்துகின்றது.
நாலடியார் காலத்திலே நல்ல நாள் பார்த்து அந்நாளிலே திருமணம்
செய்யும்
வழக்கம்
இருந்தது.
திருமணக் காலத்தில் பலரும் அறியும்படி
வாத்தியங்கள்
முழங்கும்.
|
|
‘‘பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க மெல்இயல்.
|
பலரும் அறியும்படி பறையடித்து, நல்ல நாள் கேட்டு, கல்யாணம்
புரிந்துகொண்டு
மனைக்குள்
புகுந்த மெல்லிய தன்மையுடையவள்’’
(பா.85)
பறையடிப்பதிலே மணப்பறை, பிணப்பறை என்று இரண்டு வகைப்
பறைகள் உண்டு; மணம் செய்யும் போது அடிக்கும் பறை மணப்பறை;
இறந்தவர்க்காக
அடிக்கப்படும் பறை
பிணப்பறை.
|
|
மன்றம் கறங்க மணப்பறை ஆயின
அன்றுஅவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் பின்றை
ஒலித்தலும் உண்டாம்.
(பா.23)
|
கல்யாண மண்டபம் முழுதும் ஒலிக்கும்படி மணப்பறையாக
அடிக்கப்பட்ட
பறை.
அன்றே,
அவருக்கு அவ்விடத்திலே பிணப்பறையாக
மாறி ஒலிக்கவும்
கூடும்’’.
தீவினை செய்தவர்கள் தாம் செய்த தீவினைகளின் பயனை மீண்டும்
பிறந்து
அனுபவிப்பார்கள்.
இந்த நம்பிக்கை நாலடியார் பாடல்களில்
காணப்படுகின்றது.
|
|
‘‘அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே,-அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால் (பா.123) |
|