நாட்டினர்க்கோ, ஒரு மொழியினர்க்கோ என்று செய்யப்படவில்லை. மனித
சமூகம்
முழுவதற்கும்-உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாகச்
செய்யப்பட்டதாகும்.
இதனாலேயே
இன்று திருக்குறள் உலகப் பொதுநூல்
என்று கொண்டாடும்படி
சிறந்து விளங்குகின்றது.
தமிழிலே முதன் முதல் தோன்றிய நீதி நூல் திருக்குறள் தான்.
வடமொழியிலே
ஸ்மிருதிகள் பல உண்டு. அவைகள் மக்கள் இன்னின்ன
காரியங்களைச் செய்ய வேண்டும்;
இன்னின்ன காரியங்களைச்
செய்யக்கூடாது;
என்று கட்டளையிடுகின்றன. அந்நூல்களிலே,
இல்லறத்தான்
கடமை, துறவிகளின்
கடமை, அரசியல் அறங்கள், முதலியவைகள்
கூறப்படுகின்றன. அவைபோன்ற நூல்
தமிழிலே திருக்குறளுக்கு முன்
ஒன்றேனும் இல்லை.
திருக்குறளை வடமொழியிலே ஸ்மிருதிகளுக்கு ஒப்பிடலாம். ஆனால்
ஒருவகையிலே
அவைகளை விட உயர்ந்து நிற்கின்றது திருக்குறள்.
ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள்அனைத்தும் வருணாஸ்ரம தர்மத்தை
அடிப்படையாகக் கொண்டவை. சாதிக்கொரு நீதி கூறுவன.
திருக்குறளோ மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதி, மக்கள்
அனைவர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றது. இதுதான்
திருக்குறளுக்குள்ள
தனிச்சிறப்பு.
திருக்குறளின் மாண்பைக் காட்ட அதற்கு அமைந்திருக்கும் பெயர்களே
போதும்.
திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் அமைந்திருக்கின்றன. வேறு
எந்த
அறநூல்களுக்கும்
இத்தனை பெயர்கள் இல்லை.
1. திருக்குறள். 2. உத்தர வேதம் 3. திருவள்ளுவர்,
4. பொய்யாமொழி,
5. வாயுரை வாழ்த்து, 6. தெய்வ நூல், 7. பொதுமறை. 8.முப்பால், 9. தமழ்
மறை
இவைகளே திருக்குறளைக் குறிக்கும் ஒன்பது பெயர்கள்.
|