திருக்குறள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால்தான் இதற்கு
முப்பால் என்று பெயர். முதற் பகுதி அறத்துப்பால்,
இதில் இல்லறம், துறவறம் இரண்டைப்
பற்றியும் முப்பத்தெட்டு
அதிகாரங்களில் கூறப்படுகின்றன.
இரண்டாவது பகுதி
பொருட்பால், இதிலே, அரசாள்வோர்க்கு வேண்டிய
தகுதிகள்; அமைச்சருக்கு வேண்டிய தகுதிகள்;
அரசாங்கத்திற்கு வேண்டிய
அங்கங்கள்; பொருளீட்ட வேண்டிய முறை; அரசாட்சியின்
கடமை;
குடிமக்களின் கடமை; ஆகிய அனைத்தும் வலியுறுத்தப்படுகின்றன.
எழுபது
அதிகாரங்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன.
மூன்றாவது பகுதி காமத்துப்பால், இதிலே பண்டைத் தமிழர்களின்
குடும்ப வாழ்க்கை
முறையைப் பற்றிக் கூறப்படுகின்றது. ஒரு ஆணும்,
பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு
காதல் கொள்ளுவது; அவர்கள் உள்ளம்
ஒன்றுபட்டுக் காதலனும், காதலியுமாய் மறைந்து
வாழ்வது; பிறகு அவர்கள் எல்லாரும்காண மணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துவது.
இதுவே
பழந்தமிழர் வாழ்க்கை முறை. இப்பண்பாட்டையே, களவியல், கற்பியல்
என்று
இரண்டு பகுதியாகப் பிரித்துக் கூறுகின்றது. காமத்துப் பாலில் உள்ள
அதிகாரங்கள்
இருபத்து ஐந்து.
இவ்வாறு அமைந்துள்ள திருக்குறளிலே, வள்ளுவர் தம்
காலத்திலிருந்த
எல்லாப் பொருள்களைப் பற்றியும் விளக்கியிருக்கின்றார். இவ்வுண்மையை
|