பரத்தையர் வீடு சென்று
திரும்பிய தலைவனிடம் தோழி சொல்லியது
இப்பாட்டு.
அவன் தலைவியின் பெண்மை நலத்தை நுகர்ந்தான்.
அவளுடைய அழகையெல்லாம்
கவர்ந்து விட்டான். அதன் பின் அவன்
பரத்தையர்களின்
அழகிலே மயங்கி அவர்களிடம்
சென்று இன்பம் நுகர்ந்து
திரும்பினான். அப்பொழுதுதான் தோழி
அவனைப் பார்த்து
இப்படிப் பேசினாள்.
‘‘காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல ஊரையுடையவனே தலையாயாரிடம்
நட்புகொண்டால்
அவர்கள்
நமக்கு வேண்டுவனவற்றை உதவுவார்கள்; நமக்கு
உதவுவதே
அவர்கள்
நோக்கமாக இருக்கும்; நம்மிடம்
சுரண்டமாட்டார்கள்.
கடைப்பட்டவர்களின்
நட்போ இதற்கு
எதிரானது. அவர்கள் நமக்கு உதவ
மாட்டார்கள்.
நம்மை
மொட்டையடிப்பதே அவர்கள்
கருத்து. நம்மிடம்
உள்ள எல்லாவற்றையும் சுரண்டிக்
கொள்ளுவார்கள்.
இதைப் போல நீயும்
என் தலைவியின் இளமைப் பருவ அழகு
முழுவதையும் கொள்ளை கொண்டு
விட்டாய்!’’
என்பதே இந்த அடிகளின் பொருள்.
தலைவன், தலைவியின் அழகைக் கவர்ந்ததற்கு எடுத்துக்
காட்டியிருக்கும்
இவ்வுதாரணம் மிகவும்
பொருத்தமானது.
கடைப்பட்டவர்களிடம் நட்புகொள்ளுவதனால்
பயனில்லை; அது
ஆபத்தானது; என்ற அறிவையும்
நாம் பெறுகின்றோம்.
திணைமொழி ஐம்பதில்
உள்ள பாடல்கள் அனைத்தும் மிகவும்
சுவையுள்ளவை. எல்லா
வெண்பாக்களும், மோனையும் எதுகையும்
அமைந்த
இனிய வெண்பாக்கள்.
|