பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் 23

இது பெண்களின் திறமையைக் காட்டும் சிறந்த பாடல் இதுபோன்ற இனிய
பாடல்கள்இந்நூலிலே இன்னும் பல உண்டு.

பழக்க வழக்கங்கள்

பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலிலே
காணலாம்.

கருமேகம் கண்ணனுடைய நிறத்தைக் கொண்டிருந்தது; மின்னல்
முருகனுடையவேற்படையின் ஒளியைப் போலிருந்தது; என்று கூறுகின்றது
ஒரு செய்யுள்.
 

 

‘‘மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி.
 

மல்லர்களை வென்ற கண்ணனுடைய நிறத்தைப் போலக் கருத்து
எழுந்து, சிறந்த கடம்ப மலரை விரும்பிய முருகனுடைய வேலைப்போல
மின்னி’’ என்பதே அச்செய்யுள்,

முருகனுக்கு ஆடு வெட்டி, இரத்தத்தைச் சிந்திப் பூசைபோடுவது
பண்டைக்கால வழக்கம்.
 

 

‘‘மறியீர்த்து உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோடு அலம் வரும் யாய்                 (பா.20)

வேலைக் கையிலேந்தி ஆடுகின்ற பூசாரியை அழைத்து,
ஆட்டுக்குட்டியை அறுத்து, அதன் இரத்தத்தை நாற்றிசைகளிலும் சிந்தி,
இவ்வாறு முருகனுக்குப் பூசைபோடுவதாகிய தொழிலில் ஈடுபட்டு
வருந்துகின்றாள் எனது தாய்’’.

இறந்த வீரர்களுக்கு அவர்களின் நினைவாகக் கல் நடுவார்கள். இது
பண்டை வழக்கம். இதனை ‘‘நடுகல்-விரிநிழல் கண்படுக்கும்
வெம்கானம்’’
என்பதனால் காணலாம். ‘‘வீரர்களுக்காக நடப்பட்டிருக்கும்
கல்லின் விரிந்த நிழலிலே