பக்கம் எண் :

24சாமி சிதம்பரனார்

New Page 1

பேய் படுத்துறங்கும் கொடிய கானகம்’’ (பா.35) என்பதே இதன் பொருள்.

காரமான மருந்தைப் போட்டுப் புண்ணை ஆற்றும் வழக்கம்
அக்காலத்தில் இருந்தது. இதனை இந்நூலின் 24-வது பாட்டிலே பார்க்கலாம்.

புகழுடன் வாழ்வது மக்கள் கடமை. பிறர் துன்பத்தைக் களைந்து உதவி
செய்வதே நல்லறம். அந்த நல்லறமே புகழைத் தரும். இந்நீதியையும்
இந்நூல் உணர்த்துகின்றது.
 

 

‘‘மிக்க மிகுபுகழ் தாங்குபவோ?தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடி யாதார்.                               (பா.48)

தன்னை அடைந்தவர்களின் தளர்ச்சியைத் தன்னுடையதாகக் கொண்டு
அதைக் களைய முன்வராதவர் மிகுந்த புகழைப் பெற முடியுமா?’’

இதனால் ஒரு சிறந்த நீதியைக் காணலாம். இந்நூல் தமிழர்களின்
தனிப்பட்ட வாழ்க்கைச் சிறப்பை-காதலன் காதலிகளின் அன்பு வாழ்க்கையை
எடுத்துரைக்கின்றது.