பக்கம் எண் :

4

4. ஐந்திணை அறுபது

நூலின் சிறப்பு

ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் அறுபது பாடல்கள்
அடங்கியது. இதற்கே ஐந்திணை அறுபது என்று பெயர். இந்நூலைக்
கைந்நிலை என்னும் பெயருடன் வெளியிட்டிருக்கின்றனர்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து
திணை ஒழுக்கங்களைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றன.

இந்நூலிலே இப்பொழுது சிதையாமல் முழு உருவில் 43
வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு திணையைப் பற்றியும் பன்னிரண்டு
பன்னிரண்டு வெண்பாக்கள் இந்நூலில் பாடப்பட் டிருக்கின்றன. குறிஞ்சித்
திணையைப் பற்றிய பன்னிரண்டு பாடல்களில் முதலும் எட்டாவதும்
சிதைந்திருக்கின்றன. பத்து வெண்பாக்களே முழு உருவில் உள்ளவை.
பாலைத் திணை பற்றிய பன்னிரண்டு வெண்பாக்களில் 2, 5
எண்ணுள்ள வெண்பாக்கள் சிதைந்திருக்கின்றன. 3, 4, 8 ஆகிய மூன்று
வெண்பாக்கள் இல்லை. 7 வெண்பாக்கள் தாம் முழு உருவில் இருக்கின்றன.
முல்லைத் திணையைப்பற்றிய வெண்பாக்களில் மூன்றே வெண்பாக்கள் தாம்
முழுசாக இருக்கின்றன. மூன்று முதல் பதினொன்று வரையில் உள்ள ஒன்பது
வெண்பாக்கள் அழிந்துவிட்டன. மருதத்திணையிலே இரண்டாவது வெண்பா
மட்டும் சிறிது சிதைந்திருக்கின்றது. ஏனைய பதினொன்றும்