சிதைவின்றி அப்படியே இருக்கின்றன. நெய்தல் திணையைப் பற்றிய
பன்னிரண்டு
வெண்பாக்களும் அப்படியேயிருக்கின்றன.
மூன்றாவது
வெண்பாவில் இரண்டாவது அடியில்
ந என்ற ஒரு எழுத்து மட்டும்
சிதைந்திருக்கின்றது. ஆதலால்
இதைச் சிதைவு என்று
சொல்ல முடியாது.
அகத்திணை நூல்களிலே இதுவும் ஒரு சிறந்த நூல்; ஒவ்வொரு
நிலத்திலும் உள்ள
இயற்கைக் காட்சிகளை
அழகாக எடுத்துரைக்கின்றது.
இந்நூற் பாடல்கள் முழுவதும்
கிடைத்தால் நன்றாக இருக்கும்.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின்
அறுபதாவது
பாட்டிலே தென்னவனும்,
கொற்கை நகரும் காணப்படுகின்றன.
இச்செய்யுள் பாண்டியன்
வெற்றியைப் பாராட்டுகின்றது. இதைக்
கொண்டு
இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு
புலவர் என்று எண்ணலாம்.
|