இந்நூலில் காட்டப்படும் வருணனைகள் இவ்வாறு இயற்கையாகவே
அமைந்திருக்கின்றன.
கருத்துள்ள செய்யுட்கள்
காதலன் ஒவ்வொரு நாளும் இரவிலே காதலியைக் கண்டு கலந்துமகிழ
வருகின்றான்.
அதுபற்றித்
தலைவி கவலை அடைகின்றாள். அவன் இரவில்
வருவதனால் அவனுக்கு
ஏதேனும்
ஆபத்து நேர்ந்தால் என்ன
செய்வது
என்பதுதான் அவள் கவலை. அவள் தன்
காதலன் வரும் வரையிலும்
உறங்குவதில்லை. அவளுடைய உள்ளக் கவலை உறக்கத்தைக்
கெடுத்து வந்தது. இனி, வெளிப்படையாக மணம்புரிந்துகொண்டு
வாழ்ந்தால்தான்
கவலையற்று வாழமுடியும் என்று அவள் தன் தோழியிடம்
உரைக்கின்றாள். இந்த
முறையிலே
அமைந்துள்ளது ஒரு செய்யுள்.
‘‘தோழியே! நமது தலைவன் பொன்போன்ற பூங் கொத்துக்களையுடைய
வேங்கை
மரங்கள் நிறைந்த
மலை நாட்டையுடையவன். அவன்
மின்னலைப்போல் ஒளிவீசி இருளை
ஓட்டுகின்ற வேலைக் கையிலேந்தி
இந்த
இருட்டிலே இப்பொழுது வந்து கொண்டிருப்பான்.
அவன் மலைக்காட்டு
வழியிலே, வந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவிலே, எனது கண்
இமைகள் ஒன்றோடு ஒன்று எப்படித்தான் பொருந்தும்? அவனை நினைத்து
என் கண்கள்
உறங்க மறுக்கின்றன.
|