5. ஐந்திணை எழுபது
நூல் வரலாறு
இது ஐந்து திணைகளைப் பற்றியும் கூறும் எழுபது வெண்பாக்கள்
கொண்டது.
ஆதலால் ஐந்திணை
எழுபது என்ற பெயர் பெற்றது. குறிஞ்சி,
முல்லை, பாலை, மருதம்,
நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து
திணைகளைப்
பற்றியும் கூறுகின்றது; ஒவ்வொரு
திணையைப் பற்றியும் பதினான்கு
பாடல்கள் அமைந்திருக்கின்றன.
இந்நூலில் இன்றுள்ள வெண்பாக்கள் அறுபத்தாறுதான்.
முல்லையைப்பற்றிய
பாடல்களில் இரண்டு
வெண்பாக்கள் இல்லை. நெய்தல்
பற்றிய பாடல்களிலே இரண்டு
வெண்பாக்கள் இல்லை.
இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உண்டு. இது விநாயகரைப்
பற்றியது.
இக்கடவுள்
வாழ்த்துச் செய்யுளின் நடையும், போக்கும்,
நூலாசிரியரால் பாடப்பட்டது அன்று
எனத் தெரிகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தில் விநாயகர் என்ற
தெய்வம் இருந்ததாகத் தெரியவில்லை.
ஆதலால் பிற்காலத்தார்
யாரோ இந்த
வாழ்த்துப்
பாடலைச் செய்து இதனுடன் இணைத்து விட்டனர்.
இந்நூலைச் செய்த
ஆசிரியர் பெயர் மூவாதியர் இவரைப்பற்றிய
வரலாறு ஒன்றும்
தெரியவில்லை. இவர் பாடிய
வேறு நூல்களைப் பற்றியோ,
செய்யுட்களைப் பற்றியோ
ஒன்றும் காணக் கூடவில்லை. இந்நூற்
பாடல்களிலே,
|