இயற்கைக் காட்சிகளையும், இனிமையையும் காணலாம். அழகிய
கற்பனைகளும்அமைந்திருக்கின்றன.
செய்யுட் சிறப்பு
தலைவியிடம், அவள் காதலனைப்
பழித்துப் பேசினாள் தோழி.
அதைத் தலைவியால்
பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
‘‘தலைவன்
இரக்க சிந்தை படைத்தவன்; அவன்
என்னை என்றும் கைவிட்டு
விடமாட்டான்; அவன் நம்மைக்
கைவிட்டாலும், நாமாக
அவனை விட்டுப்
பிரிய மாட்டோம்’’ என்று கூறினாள்.
‘‘காட்டுப் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு குரங்கு, தானே
பழுத்து
முதிர்ந்த பலாப்
பழத்தின் சுளைகளை நன்றாகத் தின்றது. பழம்
சாப்பிட்டபின் பால்
சாப்பிட வேண்டும் அல்லவா?
ஆகையால் அந்த மந்தி,
அங்கு மேய்ந்து கொண்டிருந்த
பசுவின் மடியிலே வாய் வைத்துப் பால்
குடிக்கத்
தொடங்கியது. பசு, அந்தக் குரங்கைத்
திரும்பிப் பார்க்கவில்லை.
தன் கன்றுதான் பால்
குடிக்கிறது என்று நினைத்துக்கொண்டு
பாலைச் சுரந்து நின்றது. இத்தகைய பார்க்கத் தகுந்த காட்சியமைந்த
அழகிய
மலைநாடன்
அவன். அவனை எக்காலத்திலும் நம் உயிருள்ள வரையிலும்
விட்டுப் பிரிவதில்லை’’
என்றாள் தலைவி. இப்பொருள் பொதிந்த
பாட்டுத்தான் கீழ் வருவது.
|