மற்றொரு பாட்டு மருத நிலத்தில்
நடக்கும் நிகழ்ச்சியை உரைப்பது.
கணவன்,
மனைவியை விட்டுச்சென்று பரத்தையர் வீட்டில்
வாழ்கின்றான்.
அவன் தன் இல்லத்திற்குத்
திரும்ப நினைத்தான். தன் பிரிவால் மனைவி
கோபங்கொண்டிருப்பாள்
என்பது அவனுக்குத்
தெரியும். திடீரென்று
வீட்டுக்குள் நுழைந்தால் இல்லக் கிழத்தியின் சினத்திற்கு
இலக்காக
வேண்டும் என்று எண்ணினான். மனைவியின் சினத்தைத் தணித்து அவள்
உள்ளத்திலே
சாந்தம்
பிறந்த பின்பே வீட்டுக்குள் நுழையலாம் என்று முடிவு
செய்தான்.
ஊடியிருக்கும்
காதலியின் ஊடலைத் தணிக்க அக்காலத்திலே
பாணர்களைத் தூதாக
அனுப்புவார்கள். அவ்வழக்கப்படி
காதலன் தனக்கு
வேண்டிய ஒரு பாணனைக் காதலியிடம்
சமாதானத் தூதாக அனுப்பினான்.
தூதாக வந்த பாணன்,
அவளிடம் ஏதேதோ
சமாதானப்
பேச்சு பேசினான்.
தலைவனைப் பற்றி அவன் சொல்லியதை அவள் ஏற்றுக்
கொள்ளவில்லை. அதை அறிவிக்கும் வகையிலே அவள் தூதனிடம்
பேசினாள்.
|