பார்க்க வெட்கப்படுகிறவன்தான்! அவன் அடைந்த துன்பமெல்லாம்
இருக்கட்டும்! பெரிய
யாழை உடையவனே! அவனைப்பற்றிச் சொன்னது
போதும்! உனக்கு ஏதேனும்
குறையிருந்தால் கூறு! உன்மீது எனக்கு
வெறுப்பில்லை. உன் குறையைத் தீர்க்கின்றேன்.
அவனைப்பற்றி மட்டும்
சொல்லவேண்டாம்!’’
இதுவே இப்பாட்டில் அமைந்துள்ள பொருள்.
இச்செய்யுளிலே
தமிழர்களின் சிறந்த பண்பொன்றைக் காணலாம்.
எய்தவனிருக்க
அம்பை நோவது அறியாமை என்றொரு
பழமொழியுண்டு.
குற்றவாளியை விட்டு விட்டுக்
குற்றவாளியால் தூண்டப்பட்டவனைக்
கோபித்துக்
கொள்வது அறியாமை என்பதே இப்பழமொழியின் கருத்து.
இக்கருத்துக்கு இலக்காகாதவர்கள் நல்ல
குடியிலே பிறந்த
பெண்கள்.
அறிவுள்ள
பெண்களும் இக்கருத்துக்கு இலக்காக
நிற்கமாட்டார்கள். இந்த
உண்மையை இப்பாடலிலே காணலாம்.
அறியாத பெண்களாயிருந்தால், தூது வந்த பாணன் மேல் சீறி
விழுவார்கள். இந்தத்
தலைவி அப்படிச்
செய்யவில்லை. பாணன் மீது பரிவு
காட்டினாள். குற்றம் புரிந்த
கொழுநனையே கோபித்துக் கொண்டாள்.
இச்சிறந்த கருத்தமைந்த செய்யுள் இது.
இதுபோன்ற இன்னும் பல
செய்யுட்களை இந்நூலிலே காணலாம்.
சிறந்த பல செய்திகள்
‘‘அறிவுள்ளவர்களின் நட்பே சிறந்தது. அது எப்பொழுதும் அழியாமல்
நிலைத்து,
நிற்கும்.
அவர்கள் நட்பே என்றும் வலிமையுள்ள துணையாக
நிற்கும். மேலும் மேலும் பல
நன்மைகளைத் தரும்
|