பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்35

New Page 1
கற்புள்ள பெண்கள் தங்கள் கணவனையே உயிர் என்று கருதியிருந்தனர்.
அவன் உயிர் வாழ்ந்தால் தான் தாம் உயிர் வாழ்வர். அவன் வீழந்தால்
தாமும் வீழ்வர். இதை விளக்கும் செய்யுள் கீழ்வருவது;
 
  ‘‘குறை ஒன்று உடையேன்மன் தோழி! நிறையில்லா
மன்உயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே;
அராவழங்கும் நீள்சோலை நாடனை, நம் இல்
இராவாரல்! என்பது உரை!                    (பா.14)
 

தோழியே எனக்கு ஒரு குறையுண்டு; அது நின்னால்தான்
முடியவேண்டும்; என்பால் நிலையில்லாமல் இருக்கும் என்னுயிர்க்கு ஒரு
பாதுகாவலைச் செய்யவேண்டும்; இப்பொழுதே அதைச் செய்யவேண்டும்.
நமது தலைவன் பாம்புகள் திரிந்து கொண்டிருக்கின்ற நீண்ட
சோலையையுடைய நாட்டின் தலைவன்; அவனிடம் அச்சோலையை இரவிலே
கடந்து நம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறவேண்டும்’’ என்றாள்.
இதனால் காதலும் கற்பும்நிறைந்த மாதரின் இயல்பைக் காணலாம்.

முயற்சியினாலேயே செல்வம் உண்டாகும். பெரிய சிறந்த முயற்சிக்கு
ஏற்றாற்போல் சிறந்த செல்வம் கைகூடும். இதுவே பண்டைத்தமிழர்
நம்பிக்கை.
 

  பெருந்தகு தாளாண்மைக் கேற்ப
அரும்பொருள் ஆகும்.       (பா.29)
 
செல்வத்திலேயே சிந்தையைச் செலுத்தியவர்கள் எப்பொழுதும் அதைச்
சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்; அவர்கள் சிறிதும் இரக்கம்
காட்டமாட்டார்கள்; தயவு தாட்சண்யம் என்பது எள்ளளவும் அவர்களிடம்
இராது. ‘‘தாட்சண்யம் தனநாசம்’’ என்பதைப் பின்பற்றி நடப்பர்.
 

 

‘‘மெல்லியல், கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத் தவர்.                                   (பா.30)