6. திணைமாலை நூற்றைம்பது
நூல் வரலாறு
ஐந்திணைகளைப்பற்றியும் வரிசையாகச் சொல்லுவது; நூற்றுஐம்பது
பாடல்கள்
அடங்கியது; திணைமாலை நூற்றைம்பதாகும்.
பெயர், திணைமாலை நூற்றைம்பது; ஆனால் இதிலிருக்கும்
வெண்பாக்களின்
எண்ணிக்கை நூற்றுஐம்பத்து மூன்று. இதன் இறுதியிலே
பாயிரச் செய்யுள் ஒன்று
காணப்படுகின்றது. ஆக இந்நூலில் இன்றுள்ள
பாடல்கள் 154 ஆகும்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
என்று ஒரு
பழமொழி உண்டு.
பழங்காலத்திலே நூல்கள் எல்லாம்
பனையோலையில் எழுதப்பட்டு
வந்தன.
அப்பொழுது ஒருவர் படிப்பார்;
மற்றொருவர் எழுதுவார். படிப்பவர் தப்பாகப்
படிப்பதும் உண்டு;
எழுதுகிறவர்
தப்பாக எழுவதும் உண்டு. இதுமட்டும் அன்று, அவர்கள்
தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் சேர்த்தும்
எழுதிவிடுவார்கள். இந்த
உண்மையைக்
குறிப்பதுதான் மேலே காட்டிய
பழமொழி.
இந்நூலுள்
அளவுக்குமேல் உள்ள மூன்று பாடல்கள் பிற்காலத்தினரால்
சேர்க்கப்பட்டிருக்கலாம். பாயிரச் செய்யுள் ஆசிரியர் பாடியதன்று.
வேறொருவரால் நூலைச்
சிறப்பித்துப்
பாடப்பட்டதாகும்.
|