பாடல்கள்
இந்நூற்பாடல்களின் பொருட் சிறப்பைக்காண இரண்டொரு
வெண்பாக்களே போதும்.
உதாரணமாகச்
சில பாடல்களைக் காண்போம்.
மணமாகாத மங்கை
ஒருத்தி; குறிஞ்சி நிலப் பெண்;
தினைப்புனங்காத்திருந்தாள்.
நாளடைவில் அவளுடைய தோற்றத்திலே
மாறுதல் காணப்பட்டது.
அதனால் அவளுடைய
நடத்தையிலே ஐயமுற்றனர்
பெற்றோர். உடனே ‘‘தினைப்புனம் காத்ததுபோதும்;
வீட்டுக்கு
வந்து விடு’’ என்று சொல்லி அந்தப் பெண்ணை வீட்டிலேயே
வைத்துவிட்டனர். வைத்தும்
அவளிடம் ஏற்பட்ட மாற்றம் மட்டும்
மறையவில்லை. மேலும் மாறிக்கொண்டே வந்தாள்.
அவளுடைய
மாறுதல்
வளர்ந்து கொண்டே வந்தது.
அந்த மங்கையை வளர்த்த செவிலித்தாய் அவளுடைய மாறுதலுக்குக்
காரணத்தை
அறிய
விரும்பினாள். அக்காரணம் தோழிக்குத் தெரியும்; அவள்
தனக்குத் தெரிந்ததை
மறைக்காமல் செவிலித்தாயிடம்
சொல்லுகின்றாள்.
‘‘நமது மலையுள் பலாமரங்கள்
நிறைந்திருக்கின்றன; இன்னும் பல
வளங்களும்
நிறைந்திருக்கின்றன.
அதன் அண்டையிலே உள்ள
தினைப்புனத்திலே நானும் என்
தலைவியும் பரண் மேலே அமர்ந்து காவல்
காத்துக் கொண்டிருந்தோம். அச்சமயத்தில்
பருத்த துதிக்கையையுடைய ஒரு
யானை - அதுவும் மதம்
பிடித்த யானை - எங்களை
நோக்கிச் சினத்துடன்
ஓடிவந்தது. உடனே ஒரு கட்டிளங்காளை தோன்றினான்;
அந்த
யானையை அலறிக்கொண்டு ஓடும்படி அடித்து விரட்டினான். எங்களைக்
காப்பாற்றினான்.
அவனையே என் தலைவியின் தோள்கள்
|