பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்41

New Page 1
தழுவிக் கொள்ளும்; வேறொருவன் தோள்களைத் தொடுவதற்குச் சம்மதிக்க
மாட்டா’’ என்றாள் தோழி. இதன் மூலம் தன் தலைவியின் மாறுதலுக்கான
காரணத்தைக் கூறினாள். எங்கள் உயிரைக் காப்பாற்றிய அவனுடைய
நன்றியை எம் தலைவி மறக்கமாட்டாள். நன்றி மறத்தல் தமிழர்
பண்பாடன்று; என்ற தமிழர் நெறியையும் உரைத்தாள் தோழி, இதை
உணர்த்தும் செய்யுள் கீழ் வருவது.
 
  வருக்கை வளமலையுள், மாதரும் யானும்
இருக்கை இதண் மேலேம் ஆகப்; -பருக்கைக்
கடாஅ மால் யானை கடிந்தானை அல்லால்,
தொடாஅ ஆல், என் தோழி தோள்.          (பா.14)
 

இச்செய்யுளின் வழியாகத் தமிழரின் நன்றி மறவாத உயர்ந்த
பண்பாட்டைக் காணலாம். தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும் மற்றொரு
பாடலையும் கீழே காண்போம்.

களவு மணவாழ்க்கையிலே வாழும் தம்பதிகள் இருவர். அவர்கள் தம்
களவு வெளிப்படுவதற்கு முன்பு கற்பு மணத்தம்பதிகளாகி விடவேண்டும்
என்று முடிவு செய்தனர். இதன்பின் தலைவன், தன் காதலியை அவளுடைய
பெற்றோர் அறியாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டுபோய் விட்டான்.
கருத்து ஒருமித்த காதலர்கள் மணம் புரிந்து கொள்ளுவதற்கு, ஏதேனும்
தடை ஏற்பட்டால், இவ்வாறு செய்வது பண்டைக் கால வழக்கம்.

தலைவியை வீட்டிலே காணாத செவிலித்தாய், அவளைத்
தேடிக்கொண்டு புறப்பட்டாள். பாலை நிலத்தின் வழியே அவள்
போகும்போது எதிரிலே வந்த மற்றொரு தம்பதிகளைப் பார்த்தாள்.
அவர்களிடம் ‘‘உங்களைப்போல் இருவரை இவ்வழியிலே
கண்டீரோ’’ என்று கேட்டாள். அவள் கேள்விக்கு ஆடவன்
விடையளித்தான்.

‘‘விரைவாக நீங்கள் நடந்து போங்கள். அவர்கள் நம்மிடம்
அகப்பட்டுக் கொள்ளுவார்கள்; நீங்கள் எண்ணும் எண்ணமும்