பக்கம் எண் :

42சாமி சிதம்பரனார்

New Page 1

விரைவில் கைகூடும்; நீங்கள் நினைத்துக் கொண்டு வந்த சூரியனைப்
போன்ற அந்த ஆடவனை நான் பார்த்தேன். சந்திரனைப் போன்ற அந்த
மங்கையை என் துணைவி பார்த்தாளாம்’’ என்றான் அவன்.

நண்ணிநீர் செல்மின்! நமர் அவர் ஆபவேல் எண்ணிய எண்ணம்
எளிது அரோ!- எண்ணிய
 

 

வெம்சுடர் அன்னானை யான்கண்டேன்; கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான் (பா.89)
 

இச் செய்யுள் ஒரு உயர்ந்த பண்பை எடுத்துரைக்கின்றது ஒரு ஆடவன்
பிற பெண்களைக் கண்ணால் நோக்குதலும் தவறு என்பதே அப்பண்பு. இது
தமிழர்களின் சிறந்த பண்பாடுகளுள் ஒன்று. பெண்களைப் போலவே
ஆண்களும் பிற பெண்களை பார்க்காத கற்புள்ளவர்களாயிருக்க வேண்டும்
என்பதே இதன் கருத்து. பண்டைக் காலத் தமிழர் ஒழுக்கத்திற்கு இச்
செய்யுள் ஒரு சிறந்த உதாரணம்.

இயற்கைக் காட்சிகளை இந்நூலாசிரியர் எவ்வாறு எடுத்து காட்டுகிறார்
என்பதற்கு ஒரு உதாரணம் மருத நிலத்தின் காட்சியைக் கூறும் ஒரு
வெண்பா மிகவும் தெளிவும் இயற்கையை அப்படியே சித்திரிக்கும் அழகும்
அமைந்தது அது.

ஒரு எருமை சிவந்த கண்கள் வலிமையான கொம்புகள் அது நீர
நிறைந்த வயல்களையும் அவற்றை அடுத்து பள்ளங்களையும் பார்த்து
மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை ஆனந்தமாக கனைத்துக் கொண்டது அழகான
கழனிகளிலும் பள்ளங்களிலும் பாய்ந்து நெடுநேரம் கிடந்த்து பிறகு கரையேறி
வரும்போது அதன் முதுகின் மேல் குவளை பூக்கள் இருந்தன சிவந்த கயல்
மீன்கள் இருந்தன தவளைகளும் உட்கார்ந்து கொண்டிருந்தன இவைகளை
சுமந்து கொண்டு அந்த எருமை கரையேறி வருகின்றது.