என்பதே மேல் உள்ள பொருள்
அமைந்த வெண்பா. நீர் நிறைந்த
வயல்கள்; குளங்கள்;
குவளை மலர்கள்; மீன்கள்; எருமைகள்;
இவைகள்
மருத நிலத்தில் எங்கும் உள்ளவை. இந்த
இயற்கையை எடுத்துரைத்தது
இவ்வெண்பா.
தெய்வங்கள்
திருமால், பலதேவன்,
முருகன் ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார்
இவ்வாசிரியர்
‘‘மாயவனும் தம்முனும்’’
(பா.56) என்பது திருமாலையும்,
பலதேவனையும் குறிப்பது.
‘‘ஆழியான்’’ (பா.96) என்பதும்
திருமாலைக்
குறித்தது. ‘‘மாயவன்’’(பா.97) என்பதும்
திருமால்.
‘‘இரும் கடல் மா
கொன்றான் வேல்’’
(பா.93) என்பது
முருகனைக் குறித்தது. ‘‘பெரிய
கடலிலே மா மர வடிவாகி நின்ற சூரனைக்
கொன்ற முருகனது
வேல்’’ என்பதே இதன் பொருள்.
நம்பிக்கைகளும் பழக்கங்களும்
நல்வினையால்தான்
ஒருவருக்குச் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை
பண்டைத்
தமிழரிடம் இருந்தது. ‘‘வினை விளையச்
செல்வம் விளைவது
போல்’’ (பா.5) என்பது
உதாரணம்.
நல்ல நாளிலே தொடங்கும்
காரியம் இடையூறில்லாமல் வெற்றி பெறும்
என்பது
பழந்தமிழர் நம்பிக்கை. பெண் கேட்கச் செல்வார்
நல்ல நாள்
பார்த்து அந்நாளிலே
புறப்படுவார்கள். ‘‘நாள் கேட்டுத் தாழாது வந்தால்
நீ எய்துதல்
வாயால்’’ (பா.46)
|