பக்கம் எண் :

44சாமி சிதம்பரனார்

New Page 1

‘‘நல்ல நாள் கேட்டுக் கொண்டு தாமதமில்லாமல் வந்தால் இப்பெண்ணை
அடைவது உண்மை’’ என்பது இதன் பொருள்.

நாள்பார்த்து, நல்ல நேரத்திலே திருமணம் புரியும் வழக்கமும்
பழந்தமிழர் வழக்கமாகும். ‘‘நாள் ஆய்ந்து வரைதல் அறம்’’ (பா.52)
என்பதனால் இதனைக் காணலாம்.

சோதிடர்களே நல்ல நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள். அந்த நல்ல
நாளிலே திருமணம் முதலிய மங்கலமான செயல்களை நடத்துவார்கள்.
இவ்வழக்கம் தமிழகத்தில் இருந்தது. ‘‘குறிஅறிவார்க் கூஉய்க் கொண்டு
ஓர், நாள் நாடி நல்குதல் நன்று’’
(பா.54) ‘‘நல்ல குறிகளை அறிந்து
சொல்லும் சோதிடர்களை அழைத்து, ஓர் நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து
மணம்புரிந்து கொடுத்தல் நலமாகும்’’ என்பதே இதன் பொருள்.
இதனால் சோதிடர்களைக் கொண்டு நாள் பார்க்கும் செய்தியைக் காணலாம்.

குறிகேட்கும் வழக்கமும் பண்டைக் காலத்தில் இருந்தது. குறி
சொல்வோர் கழங்குக் காய்களை வைத்துக் கொண்டு, அவற்றை எண்ணிக்
குறிசொல்வார்கள். குறிசொல்லுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினாலேயே
உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என்று நம்பி வந்தனர். இதனை
இந்நூலின் 90-வது வெண்பாவால் காணலாம்.

மக்கள்மேல் தெய்வம் ஏறி நிற்பதாக நம்பினர்; முருகனுக்குப் பூசை
செய்யும் பூசாரி, கையில் வேலேந்தி ஆவேசங் கொண்டு ஆடுவான். குறி
சொல்வான். வேலைக் கையிலேந்தி ஆடுவோனுக்கு வேலன் என்று பெயர்.
தெய்வத்திற்கு ஆட்டுக் குட்டிகளையும் பலிகொடுப்பர். கள்ளும் வைத்துப்
படைப்பார்கள். இது பழந்தமிழர் வழக்கம். ‘‘வேலனார் போக, மறிவிடுக்க,
வேலியும் பாலனார்க்கு ஈக’’.(பா.12) வெறியாடுவதற்காக வந்த வேலேந்திய
பூசாரி