அழைக்கப்பட்டார்.
இவர் இந்நூலைத் தவிர வேறு எந்நூலையும்
இயற்றியதாகத்
தெரியவில்லை.
செய்யுட் சிறப்பு
இந்நூலின் செய்யுட்கள் படிப்பதற்கு இனிமையானவை. இயற்கைக்
காட்சிகளை நம் கண்
முன்னே நிறுத்திக் காட்டுவன. இந்நூலாசிரியர்
எடுத்துக்காட்டும் உவமானங்கள் மிகவும்
பொருத்தமாக இருக்கும்.
இயற்கையோடு இணைந்து காணப்படும்.
இந்நூல்
பாடல்களின்
சிறப்பைச்
சில உதாரணங்களால் காண்போம்.
கார் காலம் வந்துவிட்டது;
பிரிந்து சென்ற காதலன் இன்னும்
வரவில்லை. காதலி
பசலை நோயால் வருந்துகின்றாள். இந்த நிலையைக்
கண்டாள் தோழி, ‘‘காதலன்
வந்துவிடுவான்;
கார் காலத்தைக் கண்டால்
அவன் சென்ற இடத்திலே தாமதிக்கமாட்டான்.
நீ வருந்த வேண்டாம்’’
என்று ஆறுதல் கூறினாள். இந்தமுறையில் பல பாடல்கள்
அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு பாடல் கீழ் வருவது:
|