மேற்கணக்கு-கீழ்க்கணக்கு
பிற்காலத்தினர்
தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும்,
கீழ்வரிசை நூல்கள்
என்றும் பிரித்தனர். பத்துப்பாட்டும்
எட்டுத் தொகையும்
மேல்வரிசை நூல்கள், பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்வரிசை நூல்கள்.
குறைந்த
அடிகளைக் கொண்ட பாடல்களையுடைய நூல்களுக்குக்
கீழ்க்கணக்கு
நூல்கள்
என்று பெயர் வைத்தனர். நிறைந்த
அடிகள் அமைந்த
பாடல்களைக் கொண்ட
நூல்களை
மேற்கணக்கு நூல்கள் என்று கூறினர்.
மேற்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். அவைகளின்
எண்ணிக்கையும்
பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களும்
பதினெட்டு.
மேற்கணக்கு நூல்கள்
எல்லாம்,
பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி
வரையிலும் எழுதப்படும்
ஆசிரியப்
பாக்களால்
ஆனவை. கலிப்பா,
பரிபாட்டு,
வஞ்சிப்பா ஆகிய பாடல்கள் கொண்ட
நூல்களும்
மேற்கணக்கில்
உள்ளன.
கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல்
எட்டு அடி
வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவைகளே.
பாட்டின் பெருக்கம், சுருக்கம் கருதியே கீழ்க்கணக்கு மேற்கணக்கு
என்று நூல்களைப்
பிரித்தனர்.
நூல்களில் உள்ள பொருட்சிறப்பைக் கருதிக்
கீழ், மேல் என்று
பிரிக்கப்படவில்லை. இது
குறிப்பிடத்தக்கது.
நூல்கள் யாவை?
கீழ்க்கணக்கு
நூல்கள் இன்னின்னவை என்பதைக் குறிக்கும் வெண்பா
ஒன்று உண்டு.
நாலடி, நான்மணி,
நால் நாற்பது, ஐந்திணை, முப்பால், கடுகம்,
கோவை, பழமொழி, மாமூலம்,
|