பக்கம் எண் :

6சாமி சிதம்பரனார்

இன

   இன்னிலைசொல் காஞ்சியுடன். ஏலாதி, என்பனவே
   கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு

   இதுவே அப்பாடல். ‘‘நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது,
களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணை மொழி
ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை அறுபது, ஐந்திணை எழுபது,
திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை,
பழமொழி, சிறு பஞ்சமூலம், இனிய நிலையை எடுத்துக்கூறுகின்ற
முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பவைகளே ஒழுக்க நிலையைக்
கூறுகின்றனவாகிய கீழ்க்கணக்கு நூல்களாகும்.’’

    இச்செய்யுளில் உள்ள ஐந்திணை என்பதற்கு ஐந்து திணை நூல்கள்
என்பதே பொருள். இவ்வாறு பொருள் பண்ணாமல் ஐந்து திணைகளைப்
பற்றிக் கூறுகின்ற நூல்கள்; அவை: திணைமொழி ஐம்பது; ஐந்திணை ஐம்பது;
ஐந்திணை எழுபது; திணைமாலை நூற்றைம்பது என்று பொருள் பண்ணுவர்.
இவர்கள் இன்னிலை என்பது மற்றொரு நூல் என்றும், கைந்நிலை என்பது
மற்றொரு நூல் என்றும் கூறுவர். இதனால் இன்னிலை பதினெண்
கீழ்க்கணக்கைச் சேர்ந்ததா? கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கைச்
சேர்ந்ததா? என்ற ஐயம் எழுகின்றது.

    இன்னிலை என்றொரு நூல் உண்டு; அது அறம் பொருள்
இன்பங்களைப் பற்றிக்கூறுவது. அதுவே பதினெண் கீழ்க்கணக்கு வகையைச்
சேர்ந்தது என்று எண்ணினர். கைந்நிலை என்ற பெயருடன் ஐந்திணை
அறுபது வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்நூல் வெளி வந்தபின்,
கைந்நிலைதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்
என்பது பெரும்பாலோரின் முடிவு. இதுவே சரியான முடிவுமாகும். இதைக்
கைந்நிலையென்று கூறுவதைவிட