ஐந்திணை அறுபது என்று அழைத்துவிட்டால் பதினெண் கீழ்க்கணக்கைச்
சேர்ந்த நூல்இன்னிலையா? கைந்நிலையா?
என்ற ஐயத்திற்கே இடமில்லை.
ஆதலால் ஐந்திணை
என்பதற்கு ஐந்து திணை நூல்கள் என்று பொருள்
கொள்வதே பொருத்தமானதாகும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் இந்த வெண்பா,
நூல்களின்
பெயர்களைக் குறிப்பதற்காகவே பாடப்பட்டதாகும். பதினெட்டு
நூல்களையும் எளிதில்
நினைவில் வைத்துக் கொள்ளுவதற்காகவே
எழுதப்பட்டதாகும். நூல்களின் சிறப்பைக் கருதி
அவைகள் வரிசைப்படுத்திப்
பாடப்படவில்லை. நூல்களின் ஏற்றத் தாழ்வு கருதி ஒன்றன்
பின் ஒன்றாக வரிசையாக வைத்துப் பாடப்பட்டிருக்குமானால் முப்பால்
என்பதையே
முதலில் வைத்துப் பாடியிருப்பர். முப்பால் திருக்குறள்,
இதைவிடச் சிறந்த நூல் வேறில்லை.
இது பதினொரு நூல்களுக்குப் பின்
பன்னிரண்டாவதாக வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆதலால் இப்பாட்டில் உள்ள
வரிசையைக் கொண்டு நூலின் ஏற்றத் தாழ்வுகளை
மதிப்பிடுதல் தவறாகும்.
இருவகை நூல்கள்
இப்பதினெட்டு நூல்களிலே ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை.
ஏனையபன்னிரண்டு நூல்களும் புறப்பொருள் பற்றியவை. இப்பன்னிரண்டு
நூல்களிலே
முப்பாலிலும், நாலடியிலும் அகப்பொருள் பற்றியும்
கூறப்பட்டிருக்கின்றன. ஆயினும்
இவைகளிலே புறப்பொருள் பற்றிய
செய்திகளே மிகுதியாகச் சொல்லப்படுகின்றன.
ஆதலால் இவற்றைப்
புறப்பொருள் நூல்களின் தொகுதியிலே சேர்ப்பதுதான் சிறந்ததாகும்.
|