1. திணைமொழி ஐம்பது; 2. ஐந்திணை ஐம்பது; 3. ஐந்திணை அறுபது
(கைந்நிலை); 4.ஐந்திணை எழுபது;
5. திணைமாலை நூற்றைம்பது; 6. கார்
நாற்பது; இவ்வாறு நூல்களும்
அகப்பொருள் பற்றியவை. இவைகள்
குறிஞ்சி,
பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்றஐந்து நிலத்தின் இயல்புகளைக்
கூறுவன; அந்நிலத்திலே
நடைபெறும் காதலன் காதலிகளின்
ஒழுக்கங்களைப்
பற்றி உரைப்பன. இன்பப் பகுதி ஒன்றைப் பற்றியே
இவைகள்உரைக்கின்றன.
மற்றைய பன்னிரண்டு நூல்களிலே பதினொரு நூல்கள் அறம், பொருள்,
இன்பம்
என்னும்
முப்பொருள்களைப் பற்றியும் உரைப்பன. இப்பதினொரு
நூல்களிலே தலைசிறந்தது
முப்பால்; அதாவது திருக்குறள்.
இதற்கு
அடுத்தப்படியாக நாலடியும், பழமொழியும் ஆகும்.
இவைகள் உயர்ந்த
அறங்களை எடுத்துரைக்கின்றன.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும்,
மனித சமுதாயமும் பின் பற்றவேண்டிய ஒழுக்க முறைகளை விரிவாகக்
கூறுகின்றன.
இவைகளே அறநூல்கள் நீதி நூல்கள், ஒழுக்க நூல்கள் ஆகும்.
இந்நூல்களைப்
படிப்பதன் மூலம் பண்டைத் தமிழர்களின் சிறந்த
ஒழுக்கங்களைக்
காணலாம்; அவர்களுடைய சமுதாய
அமைப்பை அறியலாம்;
அவர்களுடைய அரசியல்
முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தெரிந்து
கொள்ளலாம். தமிழர்களின் உயர்ந்த
நாகரித்தையும் பண்பாட்டையும்
அறிவதற்கு
இந்தப் பதினொரு நூல்களும் துணை
செய்கின்றன.
1. முதுமொழிக்
காஞ்சி; 2. திரிகடுகம்; 3. இன்னாநாற்பது;4. இனியவை
நாற்பது;
5.நான்மணிக்கடிகை;
6. சிறுபஞ்சமூலம்; 7. ஏலாதி; 8. ஆசாரக்
கோவை;
9. நாலடியார்;
10. பழமொழி நானூறு; 11.
முப்பால் என்னும்
திருக்குறள். இவைகளே
அந்நூல்கள்.
|