பொய்கையார் என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து
பாடிச்
சேரனைச்
சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல்
தோன்றுவதற்குக்
காரணமாகக் கூறப்படும் வரலாறு.
புறநானூற்றில் உள்ள 74-வது பாட்டு சேரமான் கணைக்கால்
இரும்பொறை பாடியதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்யுளின்அடியிலே
ஒரு
குறிப்பு காணப்படுகின்றது. ‘‘சேரமான்
கணைக்கால் இரும்பொறை,
சோழன் செங்கணானோடு
போர்ப்புறத்துப் பொருது
பற்றுக்கோட்பட்டுக்,
குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து,
தண்ணீர் தாவென்று
பெறாது,
பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்தது. உண்ணான்
சொல்லத் துஞ்சிய
பாட்டு’’
என்பதே அக்குறிப்பு.
செங்கண்ணானுடன் போர் செய்து தோற்ற சேரன், குடவாயிற்
கோட்டத்திலே
சிறைப்பட்டிருந்தான். தண்ணீர் கேட்டான். காவலர்கள்
அவமதித்துப் பேசினர்; பிறகு
தண்ணீர் தந்தனர்; அதை உண்ண
விரும்பாமல் இப்பாடலைப்பாடி உயிர் துறந்தான்
என்பதே இக்குறிப்பின்
பொருளாகும்.
களவழியின் வரலாறு சேரமான் சிறையிலிருந்து விடப்பட்டான் என்று
கூறுகின்றது.
புறநானூற்று
அடிக்குறிப்பு சேரன் சிறையிலேயே மாண்டான்
என்று கூறுகின்றது. இரண்டும்
ஒன்றுக்கொன்று முரண்.
ஆதலால்
புறநானூற்றுப் பாடல் பாடிய சேரன் கணைக்கால்
இரும்பொறை வேறு;
களவழி நாற்பதின் மூலம்
விடுதலையடைந்த சேரன் வேறு, என்று
கருதுவதற்கே இடந்தருகின்றது. இவ்வாறே சில அறிஞர்கள்
கருதுகின்றனர்.
பொய்கையார் என்னும் இப்புலவர், பொய்கை என்னும் ஊரிலோ,
அல்லது பொய்கை
என்னும் நாட்டிலோ
|