பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்53

New Page 1

பிறந்தவராதல் வேண்டும். ஆதலால் இப்பெயர் பெற்றார். ஆனால் இவர்
என்ற ஊரினர் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
தொண்டியென்பது சேரநாட்டுத் துறைமுகம் மேற்குக் கடற்கரையில் இருந்தது.

பொய்கை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார்களில் ஒருவர். இந்த
ஆழ்வாரும், இப்பொய்கையாரும் ஒருவர் என்று சிலர் எண்ணுகின்றனர்.
பொய்கையாழ்வார் வேறு; இந்தப் புலவர் வேறு. பொய்கையார் பெயரால்
உள்ள பாடல்கள், புறநானூற்றில் இரண்டும், நற்றிணையில் ஒன்றும்
காணப்படுகின்றன. அவர் வேறு இவர் வேறு என்று எண்ணத்தான் இடம்
உண்டு.

பாடற் பெருமை

இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக்
காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம்.
சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால்,சேரனுக்கும், சோழனுக்கும்
நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது
வியப்பன்று.

போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு
மடியும் பயங்கரக் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும்
போர்க்களக் காட்சி; இவைகளை இக்களவழிப் பாடல்களிலே காணலாம்.
இந்நூலைப் படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே
விரும்புவார்கள்.

போரினால், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல பண்டங்கள்
பாழாகும். இது ஒருபுறம் இருக்கட்டும். போரிலே பல வீரர்கள் மடிவதன்
காரணமாகப் பல மக்கள் ஆதரவற்ற அநாதைகளாகின்றனர். போர் நடந்தால்
- போர்க்களத்திலே வீரர்கள் மாண்டால்- பிள்ளைகளையிழந்து தவிக்கும்