பெற்றோர்கள் பலர்;
காதலர்களை இழந்து கவலைப்படும் மனைவிகள் பலர்;
தந்தைகளையிழந்து தவிக்கும்
பிள்ளைகள் பலர்; ஆதலால்தான் மக்கள்
சமுதாயத்திலே
ஒற்றுமையையும், நல்வாழ்வையும்
விரும்புகின்றவர்கள்
போரை வெறுக்கின்றனர்.
சமாதானத்தை விரும்புகின்றனர். இக்கருத்தை
இந்நூலின்
பாடல்களிலே காணலாம்.
சோழன் போர் புரிந்த
போர்க்களத்திலே, தங்கள் உறவினர்களாகிய
வீரர்களையிழந்த
மக்கள் நாற்றிசையும் கேட்கும்படி
அலறி அழுகின்றனர்;
ஓடுகின்றனர். இப்படி
அழுகின்றவர்களில் பெண்களே பெரும்பாலோராகக்
காணப்படுகின்றனர்.
இக்காட்சி,
மரங்கள் அடர்ந்த சோலையிலே,
பெருங்காற்று புகுந்து வீசுவதைக்கண்டு, அஞ்சிய
மயிலினங்கள்,
வெவ்வேறு
திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது; என்று
கூறுகின்றது ஒரு
செய்யுள்.
|
செங்கட்சோழன்
போர் செய்த போர்க்களத்திலே, மரங்கள் அடர்ந்த
சோலையில் காற்று
புகுந்து கடுமையாக வீச,
அதைக்கண்டு பயந்து பிரிந்து
பிரிந்து ஓடுகின்ற மயிற்
கூட்டத்தைப்போல, தம் உறவினரை இழந்தவர்கள்
நான்கு திசைகளிலும் ஓடிஓடி அலறி
அழுகின்றனர்.
இச்செய்யுளைப் படிப்பவர்கள்,
போர் எவ்வளவு கொடுமையானது;
மக்களுக்கு
எவ்வளவு மனவேதனையைத் தரக்கூடியது; என்பதை உணராமல்
இருக்க முடியாது.
|