பக்கம் எண் :

56சாமி சிதம்பரனார்

New Page 1

இச்செய்யுள் போர்க்களத்தின் பயங்கரக் காட்சியை நமக்குக் காட்டுகின்றது
.இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல.

பழக்க வழக்கங்கள்

தமிழ் நாட்டிலே கார்த்திகை விழாக் கொண்டாடிய செய்தி இந்நூலிலும்
காணப்படுகின்றது.

‘‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்ற       (பா.17)

கார்த்திகைத் திருவிழாவின்போது கொளுத்தி வைக்கப்பட்ட மிகுதியான
விளக்குகளைப் போலக் காணப்பட்டன.’’

பாம்பு பிடிப்பதனால் சந்திரகிரகணம், சூரியகிரகணம் ஏற்படுகிறதென்ற
நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் இருந்தது.

‘‘கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம்பு ஒக்குமே.     (பா.22)

கலை நிரம்பிய ஒளி பொருந்திய சந்திரனை நக்கி விழுங்கும் பாம்பை
ஒத்திருந்தது’’

ஐந்து தலைப்பாம்பு உண்டு என்ற நம்பிக்கையும் அக்காலத்
தமிழர்களிடம் இருந்தது. இதனை ‘‘ஐவாய்வயநாயகம்’’ (பா. 26)

என்ற தொடரால் அறியலாம்.

நிலத்தைப் பூமிதேவி என்று, பெண்ணாகக் கருதும் வழக்கம்
அக்காலத்திலிருந்தது.

        ‘‘மையில் மாமேனிநிலம் என்னும் நல்லவள்

குற்றமற்ற அழகான மேனியை யுடைய நிலமெனும் நல்லமாது’’